Advertisement

நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்குவது இவரா?

By: Nagaraj Sun, 20 Nov 2022 2:15:18 PM

நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்குவது இவரா?

சென்னை: நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று முன்தினம் தன் 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது விக்னேஷ் சிவன் தன் சமூகவலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகும் 81வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது.

shooting,production,soon,nayanthara,81st film,announcement ,படப்பிடிப்பு, தயாரிப்பு, விரைவில், நயன்தாரா, 81வது படம், அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி, மற்றும் பட்டாஸ் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில் நயன்தாரா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார்.


அவரின் 81வது திரைப்படமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்க இருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|