Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளாரா கவுண்டமணி?

By: Nagaraj Mon, 18 July 2022 9:33:47 PM

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளாரா கவுண்டமணி?

சென்னை: கவுண்டமணி நடிக்கிறாரா?... நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன்னே அஸ்வின் கூட்டணியில் உருவாகும் படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த ‘டான்’ படத்திற்குப் பின் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அனுதீப் இயக்கத்தில் உருவான அவருடைய அடுத்த படமான ’பிரின்ஸ்’ திரைப்படமும் இந்த வருட தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

sivakarthikeyan,goundamani,image,information,notice ,சிவகார்த்திகேயன், கவுண்டமணி, படம், தகவல், அறிவிப்பு


இந்நிலையில் ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாவீரன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு மேடையில் சிவ கார்த்திகேயன் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க வேண்டுமென ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் சொல்லப்படுகிறது.

Tags :
|