Advertisement

ரஜினியின் அடுத்த படத்தில் மஞ்சுவாரியார் நடிக்கிறாரா?

By: Nagaraj Mon, 07 Aug 2023 07:22:47 AM

ரஜினியின் அடுத்த படத்தில் மஞ்சுவாரியார் நடிக்கிறாரா?

சென்னை: ரஜினியின் அடுத்த படத்தில் மஞ்சுவாரியார் நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தனது 170வது படத்திற்கு தயாராகி வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். ஜெய் பீம் போல இதுவும் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து, போலி என்கவுன்டரை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

மேலும் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

acting,actress,manju warrier,rajini , நடிகை, நடிப்பு, மஞ்சு வாரியர், ரஜினி

அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ரஜினிகாந்துடன் தெலுங்கு நடிகர் நானி, மலையாள நடிகர் பகத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினியுடன் நடிப்பது குறித்து மஞ்சுவாரியரிடம் படக்குழுவினர் பேசி வருகின்றனர். மஞ்சு வாரியர் ஏற்கனவே தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன், அஜித்குமாருடன் துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|