Advertisement

பிக்பாஸ் வீட்டிற்குள் மன்சூர் அலிகான் செல்ல போகிறாரா?

By: Nagaraj Sun, 23 Oct 2022 11:10:19 PM

பிக்பாஸ் வீட்டிற்குள் மன்சூர் அலிகான் செல்ல போகிறாரா?

சென்னை; டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் மன்சூர் அலிகான் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்- 6வது நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து உட்பட 20 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். அதன் பிறகு முதல் வாரத்தில் 21வது போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

information,mansoor ali khan,expectations,bigg boss,villain ,
தகவல், மன்சூர் அலிகான், எதிர்பார்ப்புகள், பிக்பாஸ், வில்லன்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி இரண்டாவது வாரம் போய்க்கொண்டிருந்தபோது ஜி.பி.முத்து தனது மகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இந்த நிலையில், ஜி.பி.முத்துக்கு பதிலாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.



Tags :