Advertisement

காந்தாரா-2ல் ரஜினி நடிக்கிறாரா? இயக்குனர் என்ன சொல்கிறார்

By: Nagaraj Thu, 23 Feb 2023 10:16:39 PM

காந்தாரா-2ல் ரஜினி நடிக்கிறாரா? இயக்குனர் என்ன சொல்கிறார்

சென்னை: ரஜினி நடிக்கிறாரா?... 'காந்தாரா' மெகா வெற்றியைத் தொடர்ந்து, 'காந்தாரா 2' படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், அப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்பது குறித்த கேள்விக்கு இயக்குநர் ரிஷப் ஷெட்டி சூப்பர் ஹிண்ட் கொடுத்து பதில் கூறியுள்ளார்.

கடந்த 2022, செப்டெம்பர் 30ம் தேதி 'காந்தாரா' திரைப்படம் உலகெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பார்த்த அனைவரையும் மிரட்டும் தொனியில் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த நிலையில், அனைவரின் பாராட்டையும் பெற்றதோடு மட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ரிஷப் ஷெட்டியை பாராட்டி அவரை தனது வீட்டிற்கு வரவழைத்து பேசிய நிலையில், ரிஷப் ஷெட்டிக்கு பரிசும் வழங்கினார்.

அதன்பின்னர், 'காந்தாரா' படத்தின் 2ம் பாகம் எடுப்பதாக இயக்குநர் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் அறிவித்த நிலையில், அப்படத்தின் வேலைகளும் மும்முரமாக நடந்துவருகிறது.

production,company,rajinikanth,gandhara-2,netizens ,தயாரிப்பு, நிறுவனம், ரஜினிகாந்த், காந்தாரா-2, நெட்டிசன்கள்

இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் 'காந்தாரா' படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டிக்கும் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி, செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் சூப்பர் ஸ்டார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்க மறுத்த ரிஷப் ஷெட்டி, படத்தின் அனைத்து விவரங்களையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்றுகூறி அங்கிருந்து நழுவினார். இதற்கு பதிலளிக்க மறுத்து ரிஷப் ஷெட்டி இவ்வாறு கூறிச் சென்றதால், ஒருவேளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'காந்தாரா 2' படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்குமோ என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Tags :