Advertisement

சமந்தா இரண்டாவதாக திருமணம் செய்யபோகிறா ?

By: vaithegi Fri, 17 Mar 2023 2:50:28 PM

சமந்தா இரண்டாவதாக திருமணம் செய்யபோகிறா ?

நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து இருவரும் சேர்ந்து 4 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றுக்கொண்டார்கள்.

இதனையடுத்து, சமந்தா தான் நடிக்கவுள்ள படங்களில் ஆர்வம் காட்டி கொண்டு வருகிறார். இதன் இடையில், சமந்தாவிற்கு 2-வது திருமணம் என ஒரு செய்தி காட்டு தீ போல பரவி கொண்டு வருகிறது. சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ்வின் கூறிய அறிவுரையின் படி சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

samantha,marriage ,சமந்தா ,திருமணம்

ஆனால், இத்தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தி தகவலா என்பது தெரியவில்லை. எனவே இந்த திருமணம் பற்றிய செய்திக்கு சமந்தாவே விரைவில் விளக்கம் கொடுப்பார் என கூறப்படுகிறது.

மேலும், சமந்தா தற்போது சாகுந்தலம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது.

Tags :