Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சீரியல் நடிகர் அருண் பிரசாத்திற்கு சைலண்டாக நிச்சயதார்த்தம் நடந்ததா?

சீரியல் நடிகர் அருண் பிரசாத்திற்கு சைலண்டாக நிச்சயதார்த்தம் நடந்ததா?

By: Nagaraj Sat, 02 July 2022 7:56:14 PM

சீரியல் நடிகர் அருண் பிரசாத்திற்கு சைலண்டாக நிச்சயதார்த்தம் நடந்ததா?

சென்னை: சைலண்டாக நடந்திடுச்சா நிச்சயதார்த்தம்... விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா.

பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடர் மலையாளத்தில் வெளியாகி நல்ல ஹிட்டடித்த கருத்தமுத்து என்ற தொடரின் ரீமேக் தான். இந்த தொடரில் ரோஷினி மற்றும் அருண் பிரசாத் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்கள், இடையில் ரோஷினி சில காரணங்களால் தொடரில் இருந்து வெளியேறினார்.

arun prasad,engaged,willy,raja rani,married,exited ,அருண்பிரசாத், நிச்சயதார்த்தம், வில்லி, ராஜா ராணி, திருமணம், வெளியேறினார்

இப்போது அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் நடிக்கிறார், இவரை தாண்டி நிறைய கதாபாத்திர மாற்றங்கள் நடந்தது. நடிகர் அருண் பிரசாத்திற்கு விரைவில் திருமணம் என செய்திகள் வந்த நிலையில் அவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவுக்கும் நிச்சயதார்த்தம் சீக்ரெட்டாக முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். அமைதியாக இருந்து அமைதியாகவே நிச்சயதார்த்தத்தை நடத்தி விட்டாரா என்று கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து மறுப்போ, ஆமாம் என்ற தலையசைப்போ வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|