Advertisement

இந்தியன் 2 படத்திலிருந்து ஷங்கர் விலகுகிறாரா?

By: Monisha Fri, 23 Oct 2020 3:48:18 PM

இந்தியன் 2 படத்திலிருந்து ஷங்கர் விலகுகிறாரா?

ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில் திடீரென படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து கொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நின்றுபோனது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்தும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அது மட்டுமன்றி லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமலஹாசன் தயாராகி வருகிறார்.

shankar,indian 2,laika company,kamalhasan ,ஷங்கர்,இந்தியன் 2,லைக்கா நிறுவனம்,கமல்ஹாசன்

இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஷங்கர் தற்போது லைக்கா நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை தொங்குவது குறித்த திட்டத்தை அறிவிக்காவிட்டால் தான் வேறு படத்தில் பணிபுரிய இருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது .

ஆனால் இந்த தகவலை லைகா நிறுவனத்தின் சிஇஓ மறுத்துள்ளார். இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. 'இந்தியன் 2' படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் 500 முதல் 600 பேர் வரை கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் இது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். கமல்ஹாசனிடம் நேற்று கூட இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து ஆலோசனை செய்தோம். 'இந்தியன் 2' படப்பிடிப்புக்கான திட்டமிடுதல் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

Tags :