Advertisement

ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறதா சன் பிக்ஸர்ஸ்?

By: Nagaraj Fri, 30 Oct 2020 11:42:27 PM

ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறதா சன் பிக்ஸர்ஸ்?

அடுத்ததாகவும் சன் பிக்ஸர்ஸ் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "அண்ணாத்த". சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு முறைப் பெண்ணாக குஷ்பு மற்றும் மீனா நடிக்கிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கை வேடத்தில் நடிக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

rajini,sunpixers,contract,annatha,info ,ரஜினி, சன்பிக்ஸர்ஸ், ஒப்பந்தம், அண்ணாத்த, தகவல்

பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே ஹைதராபாத்தில் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதில் ரஜினி நடிப்பில் 50 சதவீத படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீதமுள்ள படப்பிடிப்புகள் தற்போது தொடங்கும் என்று செய்தி வெளியாகி இருந்தது.

இன்னும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மீதமுள்ள நிலையில் ரஜினி தனது அடுத்த திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர் தனது "தலைவர் 169" என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிப்பார் என்று ஏற்கனவே செய்தி வெளியாகி, பிறகு ரஜினி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் கமல் நடித்து தற்போது இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இதனால் தற்போது "தலைவர் 169" திரைப்படத்தை ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று தற்போதைய தகவல் கூறுகிறது.

Tags :
|