Advertisement

தளபதி 68 திரைப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா ?

By: vaithegi Tue, 14 Nov 2023 4:58:59 PM

தளபதி 68 திரைப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா ?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இத்திரைப்படத்திற்கு தான் தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இத்திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதையடுத்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு தாய்லாந்தில் மிக விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அங்கு படப்பிடிப்பு முடிந்தது. அடுத்ததாக சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது.

remake,movie,director 68 , ரீமேக்,திரைப்படம் ,தளபதி 68

தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் இந்த திரைப்படம் பிரபலமான ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்ன திரைப்படம் என்றால் 2012-ஆம் ஆண்டு வெளியான “லூப்பர்” படம் தான். லூப்பரின் கதைக்களம் 2044 ஆம் ஆண்டின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதனை மையமாக எடுக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் தளபதி 68 படம் என்று தகவல்கள் வைரலாக பரவி கொண்டு இருக்கிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஒரு வேலை தளபதி 68 படம் அந்த படத்தினுடைய ரீமேக் -ஆ அல்லது இல்லையா என்பது படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.

Tags :
|
|