Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அது தொல்லைதான்பா... ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் அட்டாக் பேச்சு

அது தொல்லைதான்பா... ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் அட்டாக் பேச்சு

By: Nagaraj Sat, 29 July 2023 11:23:20 PM

அது தொல்லைதான்பா... ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் அட்டாக் பேச்சு

சென்னை: ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதுதான் செம ஹைலைட். அவர் என்ன பேசினார் தெரியுங்களா?

நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், அண்ணாத்த படத்திற்கு பிறகு ஒரு பெரிய கேப். சரியான சப்ஜெக்ட் மற்றும் கதை கிடைக்காதது தான் இவ்வளவு கேப் வர காரணம். இயக்குனர் தான் படத்திற்கு ரொம்ப முக்கியம். தயாரிப்பாளர் அம்மா போன்றவர் என்றால், இயக்குனர் அப்பா போன்றவர். என் கேரியரை உயர்த்தியதே என்னுடைய இயக்குனர்கள் தான்.

முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, வாசு, கேஎஸ் ரவிக்குமார், ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இப்போது நெல்சன். என் கேரியரை வடிவமைத்தது இவர்கள் தான். அண்ணாத்த படத்திற்கு பிறகு பல கதைகள் கேட்டேன். எல்லாம் பாட்ஷா, அண்ணாமலை போல இருந்தது. சிலர் ஒரு லைன் கதை சொன்னார்கள், ஆனால் அதை டெவலெப் செய்தால் வேறு ஒன்றாக வந்து நின்றது. பல கதைகளை நிராகரித்தேன், தொடர்ந்து நிராகரிப்பதும் எங்கு கஷ்டமாக இருந்தது, அதனால் கதை கேட்பதையே நிறுத்திவிட்டேன்.

நெல்சன் கதை சொல்லி முடித்தபிறகு எனக்கு பிடித்திருப்பதாக கூறினேன். பீஸ்ட் ஷூட்டிங் முடித்துவிட்டு 10 நாட்கள் கழித்து வந்து மீண்டும் சொல்வதாக கூறினார்.

nallavars,superstar rajini,thollai,music release ,நல்லவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி, தொல்லை, இசை வெளியீடு

அது எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் ப்ரோமோ ஷூட் செய்து படத்தை அறிவித்துவிட்டோம். பீஸ்ட் படம் வெளியாகி நெகடிவ் விமர்சனம் பெற்றது. அந்த படம் சரியாக போகாததால் பல விநியோகஸ்தர்கள் எனக்கு போன் செய்து இயக்குனரை மாற்றும்படி கூறினார்கள்.

சன் டிவி டீமிடம் பேசும்போது அவர்கள் நெகடிவ் விமர்சனம் வருவது உண்மை தான், ஆனால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் இல்லை, பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் வருகிறது என்று தான் சொன்னார்கள். ஷூட்டிங்கில் நெல்சன் அனைத்தையும் சரியாக எடுத்தார். Hukum லிரிக்ஸ் முதல் முறையாக பார்த்தபோது தாறுமாறாக இருந்தது. அந்த பாடலில் இருந்து சூப்பர்ஸ்டார் என்பதை மட்டும் எடுக்க சொன்னேன். சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.

சூப்பர் ஸ்டார் டைட்டில் வேண்டாம் என நீண்ட காலத்திற்கு முன்பே கூறினேன், ஆனால் ரஜினி பயந்துவிட்டார் என அப்போது பேசினார்கள். நான் இரண்டு பேருக்கு மட்டும் தான் பயப்படுவேன். ஒன்று கடவுள், இன்னொன்று நல்லவர்கள்." இவ்வாறு அவர் பேசினார்.

Tags :