Advertisement

இவர்தான் வாரிசு படத்தின் வில்லனா? வெளியான ரகசியம்

By: Nagaraj Thu, 15 Dec 2022 10:44:24 PM

இவர்தான் வாரிசு படத்தின் வில்லனா? வெளியான ரகசியம்

சென்னை: வாரிசு படத்தில் இவர் வில்லனா?. வாரிசு படத்தில் எஸ்.ஜே சூர்யா தான் வில்லன் என்ற தகவல் வெளியாகி படத்தின் டுவிஸ்டை வெளியாகி உள்ளதால் செம கடுப்பில் உள்ளனராம் படக்குழுவினர்.


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- பாடலான ரஞ்சிதமே தீ தளபதி போன்றவைகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

sj surya,ganesh venkatraman,warishu,film crew ,எஸ் .ஜே .சூர்யா, கணேஷ் வெங்கட்ராமன், வாரிசு, படக்குழு

இந்நிலையில் வாரிசு படத்தில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு பேட்டியில் படத்தின் முக்கிய டுவிஸ்டை கூறியுள்ளது வட குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாரிசு திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா தான் முக்கிய திருப்பு முனை என்று கூறியுள்ளார். இதனால் தற்போது எஸ்.ஜே சூர்யா வாரிசு திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் வாரிசு திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பதை வெளியிடாமல் வைத்திருந்த நிலையில் தற்போது கணேஷ் வெங்கட்ராமன் கூறியது சற்று அதிர்ச்சியை பட குழுவினருக்கு ஏற்படுத்தியுள்ளது

Tags :