- வீடு›
- பொழுதுபோக்கு›
- குக் வித் கோமாளியிலிருந்து விலகுகிறாரா வெங்கடேஷ் பட்
குக் வித் கோமாளியிலிருந்து விலகுகிறாரா வெங்கடேஷ் பட்
By: Nagaraj Fri, 23 June 2023 6:07:15 PM
சென்னை: நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறாரா?... விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ஷோவாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி 4. சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா என நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது.
ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது முடிவை எட்டி வருகிறது. இதில் யார் வெற்றியாளராக இருப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த 4 சீசனிலும் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. காரணம் அவர் கடந்த சில நாட்களாகவே வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாரா அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாரா என கமெண்ட் செய்கிறார்கள்.
ஒரு சிலர் நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது இப்போது எப்படி அவர் விலகுவார் என்றும் கூறுகின்றனர்.