Advertisement

நடிகர் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறாரா?

By: Nagaraj Mon, 09 Nov 2020 7:53:42 PM

நடிகர் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறாரா?

நடிகர் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கோலிவுட்டில் தகவல்கள் பரபரக்கிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

kamal haasan,vijay sethupathi,expectation,villain ,கமல்ஹாசன், விஜய் சேதுபதி, எதிர்பார்ப்பு, வில்லன்

தற்பொழுது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அணுகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜே இத்திரைப்படத்தையும் இயக்கவிருக்கிறார்.

விஜய் சேதுபதி, விக்ரம் திரைப்படத்தின் டைட்டில் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பு என்று பதிவு செய்திருந்தார்.
இச்செய்தி மட்டும் உறுதியாகும் பட்சத்தில் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் பன்மடங்கு எகிறும் என்பது உறுதி.

Tags :