Advertisement

லியோ படத்துடன் மோதுகிறதா விக்ரமின் துருவ நட்சத்திரம்

By: Nagaraj Mon, 21 Aug 2023 6:48:39 PM

லியோ படத்துடன் மோதுகிறதா விக்ரமின் துருவ நட்சத்திரம்

சென்னை: வரும் அக்டோபர் 19ம் தேதி விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் லியோ படத்திற்கு தமிழகத்தில் வசூல் குறைய வாய்ப்பு என கூறுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.

இறுதியாக அர்ஜுன் பிறந்தநாள் அன்று லியோ படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை உலகளவில் லியோ திரைப்படம் ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

leo,film,vikram,dhruva nakshatra,project,collections may decrease ,லியோ, படம், விக்ரம், துருவ நட்சத்திரம், திட்டம், வசூல் குறையலாம்

இதனால் கண்டிப்பாக லியோ திரைப்படம் வசூலில் எதிர்பார்க்க முடியாத வசூலை குவிக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதே நாளில் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடித்துள்ள கோஷ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழகத்தில் பெரிதும் பாதிப்பை கொடுக்க வில்லை என்றாலும், கன்னடத்தில் லியோ படத்தின் வசூலுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே அக்டோபர் 19ஆம் தேதி விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் லியோ படத்திற்கு தமிழகத்தில் வசூல் குறைய வாய்ப்பு என கூறுகின்றனர்.

Tags :
|
|
|