Advertisement

அதுக்கு வாய்ப்பே இல்லை... தாக்குப்பிடிப்பதும் சுலபம் இல்லை

By: Nagaraj Thu, 08 Sept 2022 08:41:42 AM

அதுக்கு வாய்ப்பே இல்லை... தாக்குப்பிடிப்பதும் சுலபம் இல்லை

சென்னை: நிச்சயம் வாய்ப்பு இல்லை. பிக் பாஸ் செல்வது, அங்கே தாக்குப் பிடிப்பது ஈஸியான விஷயம் இல்லை. மெண்டல் ஸ்ட்ரென்த் நிறைய வேண்டும் என்று பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷினி ஹரிபிரியன் தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் லீட் ரோலில் நடித்த ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு விலகியது, குக் வித் கோமாளிக்கு சென்றது பற்றி மனம் திறந்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்ரியன். அறிமுகம் ஆன முதல் சீரியலிலே பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். அருண் பிரசாத் - ரோஷினி ஹரிப்ரியன் கெமிஸ்ட்ரி, நடிப்பு ரசிகர்களை பெரியதளவில் கவர்ந்தது. சீரியலும் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார்.

அவரின் விலகல் சீரியல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் விலகலுக்கான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.

bharti kannamma,leschi,cinema,roshini,bigg boss,no chance ,பாரதி கண்ணம்மா, நெகிழ்ச்சி, சினிமா, ரோஷினி, பிக்பாஸ், வாய்ப்பு இல்லை

அதன் பின்பு ரோஷினி குக் வித் கோமாளி 3ல் என்ட்ரி கொடுத்தார். சீரியலை விட்டுட்டு ஏன் ரியாலிட்டி ஷோவில் வந்தார்? என ரசிகர்கள் குழம்பினார். ஆனால் அந்த ஷோ அவருக்கு மிகப் பெரிய ரிலாக்சேஷனை தந்ததாக அவரே கூறினார்.

அதே போல் அடுத்து சினிமாவில் ரோஷினி கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றுக்கு ரோஷினி பேட்டி கொடுத்துள்ளார். அதில் ' சீரியலை விட்டு போனது எனக்கும் கஷ்டமாக தான் இருந்தது. நிறைய பேர் எனக்கு பர்சனலா மெசேஜ் அனுப்பினார்கள். அதை பார்த்து ரொம்ப நெகிழ்வா இருந்தது.

இப்ப கூட நிறைய பேர் மறுபடியும் வாங்கன்னு கூப்பிடுறாங்க. ஆனா அது முடியாது" என கூறியுள்ளார். அதுமட்டுமில்லை அவரிடம் பிக் பாஸ் சீசன் 6 குறித்தும் கேள்வி எழுப்பட்டது அதற்கு பதில் அளித்துள்ள ரோஷினி நிச்சயம் வாய்ப்பு இல்லை. பிக் பாஸ் செல்வது, அங்கே தாக்குப் பிடிப்பது ஈஸியான விஷயம் இல்லை. மெண்டல் ஸ்ட்ரென்த் நிறைய வேண்டும் என்று கூறியுள்ளார். அதே போல் சினிமாவில் ட்ரை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|