Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு

By: Nagaraj Mon, 15 Aug 2022 9:25:49 PM

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு

சென்னை: பிரமாண்டமாக நடத்த முடிவு... சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் திட்டமிட்டுள்ளது.

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த மூவரும் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தனர். இதனால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தினர். அதனை திருப்தி செய்யும் வகையில் படத்தில் இருந்து வெளியான காலத்துக்கும் நீ வேணும் மற்றும் மறக்குமா நெஞ்சம் என்ற இரு பாடல்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

the forest,grandeur,music,launch party,rajini,kamal ,வெந்து தணிந்தது காடு, பிரமாண்டம், இசை, வெளியீட்டு விழா, ரஜினி, கமல்

இதில் காலத்துக்கும் நீ வேணும் பாடலை சிம்புவும், மறக்குமா நெஞ்சம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும் பாடியுள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஆடியோ லான்ச்சை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் திட்டமிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டியில் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தில், சிம்புவுடன் சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் ஜேனரில் வெந்து தணிந்தது காடு படம் உருவாக்கப்பட்டுள்ளது

Tags :
|
|