Advertisement

அமெரிக்காவில் ஐ.டி. கம்பெனி நடத்தும் நடிகர் நெப்போலியன்

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:50:59 PM

அமெரிக்காவில் ஐ.டி. கம்பெனி நடத்தும் நடிகர் நெப்போலியன்

சென்னை: அமெரிக்காவில் பெரிய ஐ.டி., கம்பெனியை நடத்தி வருகிறார் நடிகர் நெப்போலியன் என்று தெரியுங்களா.

நடிகர் நெப்போலியனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் பல படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்திர ரோல் என நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அவர். தனது மகனுக்கு உடல்நல குறைவு இருப்பதால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் அங்கேயே அவர் செட்டில் ஆகிவிட்டார்.

நெப்போலியன் அமெரிக்காவில் விவசாயம் செய்யும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். ஆனால் அவரது மெயின் பிஸ்னஸ் ஐடி கம்பெனி தான். அவர் ஜீவன் டெக்னலாஜிஸ் என்ற பெயரில் கடந்த 23 வருடங்களாக ஐடி கம்பெனி நடத்தி வருகிறார்.

actor napoleon,usa,employment,23 years,it,company ,நடிகர் நெப்போலியன், அமெரிக்கா, வேலைவாய்ப்பு, 23 ஆண்டுகள், ஐ.டி., நிறுவனம்

அவரது மனைவியும் அதே நிறுவனத்தின் பைனான்ஸ் விஷயங்களை கவனித்து வருகிறாராம். நடிகர்கள் எப்போதும் அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குவார்கள், அல்லது சொத்து வாங்கி வைத்து செட்டில் ஆவார்கள். ஆனால் நெப்போலியன் தான் சற்று வித்தியாசமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார்.

சினிமா, அரசியல் என பல விஷயங்களில் இதற்கு முன்பு கவனம் செலுத்தி இருந்தாலும் அவர் தற்போது அமெரிக்காவின் க்ரீன் கார்டு வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் படிக்கவில்லை என்றாலும் பணம் முதலீடு செய்து அந்த நிறுவனம் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.

Tags :
|
|