Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரியா குடும்பத்தினர் என் வாழ்க்கையில் இடம் பெற்றிருப்பது நன்றிக்குரிய விஷயம்; சுசாந்த் சிங் குறிப்பு வெளியீடு

ரியா குடும்பத்தினர் என் வாழ்க்கையில் இடம் பெற்றிருப்பது நன்றிக்குரிய விஷயம்; சுசாந்த் சிங் குறிப்பு வெளியீடு

By: Nagaraj Mon, 10 Aug 2020 2:06:45 PM

ரியா குடும்பத்தினர் என் வாழ்க்கையில் இடம் பெற்றிருப்பது நன்றிக்குரிய விஷயம்; சுசாந்த் சிங் குறிப்பு வெளியீடு

தன்னுடைய வாழ்க்கையில் ரியாவின் குடும்பத்தினர் இடம்பெற்றிருப்பது நன்றிக்குரிய விஷயம் என்று சுசாந்த் சிங் கைப்பட எழுதிய குறிப்பை நடிகை ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34), கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரது மரணம் நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதுதொடா்பாக மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சுசாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ண குமாா் சிங் (74) நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சுசாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகாா் அளித்திருந்தாா்.

riya,enforcement,investigation,sushant singh,note ,ரியா, அமலாக்கத்துறை, விசாரணை, சுசாந்த் சிங், குறிப்பு

சுசாந்த் ராஜ்புத் மரணச் சம்பவம் தொடா்பாக அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது. சுசாந்த் சிங் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 15 கோடி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பீகாா் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்பான வழக்கு விசாரணையை சிபிஐக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக பீகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா். சிபிஐக்குப் பரிந்துரைக்க பீகார் அரசு முடிவு செய்ததை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங் காதலி ரியா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் காவல்துறை 6 பிரிவுகளில் ரியா மீது வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

சுசாந்த் சிங் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நடிகை ரியா ஜர் ஆனார். சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கு, நிதி விவரங்கள் தொடர்பான 20 கேள்விகள் ரியாவிடம் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகள் தனக்குத் தொடர்பில்லாதவை என ரியா பதில் அளித்துள்ளார். ரியா குடும்பத்தின் சொத்து விவரங்கள் பற்றிய கேள்விகளுடம் அவரிடம் கேட்கப்பட்டன.

இந்நிலையில் நடிகை ரியாவின் குடும்பத்தைப் பாராட்டி சுசாந்த் சிங் எழுதிய குறிப்பை ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே வெளியிட்டுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் ரியாவின் குடும்பத்தினர் இடம்பெற்றிருப்பது நன்றிக்குரிய விஷயமாக சுசாந்த் சிங் கைப்பட எழுதிய குறிப்பை அவர் வெளியிட்டுள்ளார். என்னிடமுள்ள சுசாந்தின் சொத்து இது ஒன்றுதான் என்று ரியா தெரிவித்திருப்பதாக சதீஷ் தெரிவித்துள்ளார். ரியாவை அமலாக்கத்துறை விசாரணை செய்துள்ள நிலையில் சுசாந்த் சிங் எழுதியதாக இந்தக் குறிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

Tags :
|