Advertisement

லியோ படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்

By: Nagaraj Mon, 15 May 2023 10:47:31 AM

லியோ படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்

சென்னை: இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் லியோ படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் அர்ஜூன் கதாப்பாத்திரம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

actor vijay,double role,anirudh,leo film,arjun ,நடிகர் விஜய், இரட்டை வேடம், அனிருத், லியோ படம், அர்ஜூன்

இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் லியோ படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜய் பார்த்திபன் மற்றும் லியோ என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் நடிகர் அர்ஜூன் லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத் சகோதரராக நடிக்கின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :