Advertisement

நடிகை தமன்னாவிற்கு ரூ.120 கோடி மதிப்பு சொத்து உள்ளது என தகவல்

By: Nagaraj Sat, 19 Aug 2023 07:02:14 AM

நடிகை தமன்னாவிற்கு ரூ.120 கோடி மதிப்பு சொத்து உள்ளது என தகவல்

சென்னை: நடிகை தமன்னாவிற்கு ரூ.120 கோடி சொத்துக்கள் உள்ளது என்று வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் - 2’ தொடரில் தமன்னா இடம்பெற்றுள்ள காட்சிகள் பயங்கர கவர்ச்சியாக இருந்ததாலும் காவாலா பாடலாலும் அவர் டிரெண்ட் ஆகியிருந்தார்.

actress tamannaah net worth,fans,information,released ,நடிகை தமன்னா, சொத்து மதிப்பு, ரசிகர்கள், தகவல், வெளியானது

,மேலும், முன்னணி நாயகியாக இருந்தாலும் அவருக்குப் பின் நடிக்க வந்த சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் இடத்தை தமன்னாவால் பிடிக்க முடியவில்லை. 16 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ.120 கோடிக்கும் மேல் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|