Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்

By: vaithegi Fri, 13 Oct 2023 3:10:28 PM

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான 'மார்க் ஆண்டனி’ திரைப்படம், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துஉள்ளார்.

இதில் ரிது வர்மா நாயகியாக நடித்துள்ளார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ajith,adhik ravichandran,pict ,அஜித் ,ஆதிக் ரவிச்சந்திரன் ,படம்

இந்த நிலையில் அஜித் நடிக்கும் 63வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ’நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பின்போது ஆதிக் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்திருந்ததாகவும்,

தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கதை இறுதியானால் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags :
|