Advertisement

ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தகவல்

By: Nagaraj Tue, 18 Apr 2023 11:45:33 PM

ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தகவல்

சென்னை: நடிகர் ரஜினி தற்போது பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று நெல்சன் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்து உள்ளார்.

அண்ணாத்தே’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லாலுடன் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவ ராஜ்குமார், சுனில், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

jailer,movie,anwari,vasanth,director ,ஜெயிலர், திரைப்படம், அறிவிப்பு, வசந்த், இயக்குனர்

ரஜினிகாந்த் தனது படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த வசந்த் ரவி ஒரு தகவலை கூறியிருக்கிறார்.

அதாவது இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும், இதுவரை அவர் நடித்த 169 படங்களில் இருந்தும் இது வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

Tags :
|
|
|