Advertisement

மாமன்னன்’ .. 7 நாட்களில் ரூ.36 கோடி வசூலித்துள்ளதாக தகவல்

By: vaithegi Thu, 06 July 2023 2:30:52 PM

மாமன்னன்’ .. 7 நாட்களில் ரூ.36 கோடி வசூலித்துள்ளதாக தகவல்

ரூ.40 கோடி வசூலை நெருங்கிறது .. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்து ள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

father-in-law,udayanidhi stalin ,மாமன்னன்,உதயநிதி ஸ்டாலின்


கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ.6 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, இயக்குநர் மாரி செல்வராஜுக்கு விலை உயர்ந்த மினி கூப்பர் காரை உதயநிதி பரிசாக வழங்கியிருந்தார்.

இச்சூழலில், வெளியான ஏழு நாட்களில் மாமன்னன் திரைப்படம் ரூ.36 கோடியை வசூலித்து உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வார இறுதிகளில் இந்த படம் ரூ.40 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இந்த படம் ரூ.2.25 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :