Advertisement

பிரபலமான மல்யுத்த வீரர் கேரக்டரில் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல்

By: Nagaraj Tue, 07 Mar 2023 8:15:59 PM

பிரபலமான மல்யுத்த வீரர் கேரக்டரில் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல்

கேரளா: சுதந்திரத்துக்கு முன் இந்தியாவில் பிரபலமான மல்யுத்த வீரரான குலாம் முகமது பக்ஷ் என்கிற காமா கேரக்டரில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி. அவரது அங்கமாலி டைரிஸ், ஈ மாவு மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு ஜல்லிக்கட்டு படம் அனுப்பப்பட்டது. இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

kamal,movie,program , கதை, கமல்ஹாசன், மோகன்லால்

ஆனால் இந்தியன் 2 பட வேலைகளை காரணம் காட்டி கமல்ஹாசன் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும், ரிஷப் ஷெட்டியும் தனது அடுத்த பட வேலைகள் காரணமாக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சுதந்திரத்துக்கு முன் இந்தியாவில் பிரபலமான மல்யுத்த வீரரான குலாம் முகமது பக்ஷ் என்கிற காமா கேரக்டரில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படத்தின் தயாரிப்பு தரப்பு அதை மறுத்துள்ளது. படம் குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் அறிவிப்போம் என்றார்.

Tags :
|
|