Advertisement

விரைவில் பிரபாஸ்- அனுஷ்கா திருமணம் நடக்கும் என தகவல்

By: Nagaraj Mon, 19 Sept 2022 10:16:52 AM

விரைவில் பிரபாஸ்- அனுஷ்கா திருமணம் நடக்கும் என தகவல்

சென்னை: விரைவில் பிரபாஸ் – அனுஷ்கா திருமணம் நடக்கும் என்று டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பாகுபலி. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்திருந்தார். இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தவர் பிரபாஸ்.

இவரும் நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் என்று சில வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சமீபத்தில் பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு தீடீரென மரணமடைந்தார்.

prabhas,anushka,marriage,krishnam raju,hospital,aasi ,பிரபாஸ், அனுஷ்கா, திருமணம், கிருஷ்ணம் ராஜூ, மருத்துவமனை, ஆசை

அவர் அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசைபட்டாராம். ஆனால், அது அவர் உயிருடன் இருக்கும் வரை நடக்கவில்லை.

இதனால், அவருடைய மறைவுக்கு பின்பு கண்டிப்பாக இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கிருஷ்ணம் ராஜு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தபோது, அனுஷ்கா மட்டும் சென்று அவரை சந்தித்ததாக தகவல் வெளியானது. இதனால், பிரபாஸ் - அனுஷ்கா திருமணம் கண்டிப்பாக நடக்கும் என தெரிவிக்கின்றனர்.

Tags :