Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ உலக அளவில் ரூ.150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ உலக அளவில் ரூ.150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல்

By: vaithegi Sun, 13 Aug 2023 4:46:56 PM

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ உலக அளவில் ரூ.150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்,

இதனை அடுத்து இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் நேற்று (ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் வெளியானது.இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

jailer,rajinikanth ,ஜெயிலர்,ரஜினிகாந்த்


இந்நிலையில், இந்த படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளது. உலக அளவில் முதல் நாள் ரூ.70 கோடி.. இதில் தமிழகத்தில் ரூ.23 கோடி வசூல் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் ரூ.11 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.10 கோடி, கேரளாவில் ரூ.5 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ. 3 கோடி இந்த படம் வசூலித்து உள்ளது. இந்த நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 3 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலகளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|