Advertisement

யசோதா படத்தின் டயலாக் பகுதிகள் நிறைவடைந்ததாக தகவல்

By: Nagaraj Mon, 11 July 2022 7:17:40 PM

யசோதா படத்தின் டயலாக் பகுதிகள் நிறைவடைந்ததாக தகவல்

சென்னை: சமந்தா நடித்து வரும் யசோதா படத்தில் உரையாடல் இடம் பெறும் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி மான்டேஜ் என்று சொல்லப்படும் உரையாடல் இல்லாத காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா தற்போது 'யசோதா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இருவரும் இணைந்து இயக்குகின்றனர். மணி ஷர்மா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

samantha,montage,update,preview,escalation,anticipation ,சமந்தா, மான்டேஜ், அப்டேட், முன்னோட்டம், அதிகரிப்பு, எதிர்பார்ப்பு

நடிகை வரலட்சுமி சரத்குமார், மலையாள நடிகர் உன்னி முகுந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் உரையாடல் இடம் பெறும் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி மான்டேஜ் என்று சொல்லப்படும் உரையாடல் இல்லாத காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது.

சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வரும் ஆகஸ்ட் 12-ஆம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Tags :
|