Advertisement

‘அவதார்’ பாகங்கள் தாமதமாக வெளியாகும் என தகவல்

By: vaithegi Wed, 14 June 2023 3:47:53 PM

‘அவதார்’ பாகங்கள் தாமதமாக வெளியாகும் என தகவல்

உலகம் முழுவதும் மக்கள் பலரும் வியந்து பார்க்கும் ஒரு திரைப்படம் எதுவென்றால், அவதார் என்றே தான் கூறலாம். முதல் பாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், அதனுடைய 2-வது பாகம் கடந்தாண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும், பெரும் வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில், அவதார் திரைப்படம் மொத்தமாக 5 பாகங்களாக வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் முன்னதாக அறிவித்திருந்தார். எனவே, அவதார் படத்தின் 3-வது பாகம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

avatar,part,movie ,அவதார்,பாகம் ,திரைப்படம்

அதைப்போன்று அதனுடைய அடுத்தடுத்த பாகங்கள் அடுத்தடுத்தசில ஆண்டுகளில் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.இதையடுத்து இந்த நிலையில், தற்போது ‘அவதார்’ திரைப்படங்கள் தாமதமாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே அதன்படி, ‘அவதார் 3’ டிசம்பர் 19, 2025 க்கும், ‘அவதார் 4’ டிசம்பர் 21, 2029 க்கும், ‘அவதார் 5’ டிசம்பர் 19, 2031 ஆண்டும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags :
|
|