Advertisement

விடுதலை 2ல் விஜய் சேதுபதி மகன் நடிக்கிறார் என்ற தகவல்

By: Nagaraj Sat, 22 Apr 2023 4:17:02 PM

விடுதலை 2ல் விஜய் சேதுபதி மகன் நடிக்கிறார் என்ற தகவல்

சென்னை: விடுதலை 2ல் விஜய் சேதுபதி மகன் நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பரவி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விடுதலை'. விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் என பலர் நடித்துள்ள இந்தப் படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். கடைநிலை காவல் அதிகாரியாக நடிகர் சூரியும், விடுதலைப் படை போராளியாக வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர்.

flashback,chance,vetrimaran,vijay sethupathi,son,photo ,
ப்ளாஷ்பேக், வாய்ப்பு, வெற்றிமாறன், விஜய்சேதுபதி, மகன், புகைப்படம்

'விடுதலை' படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், தற்போது முதல் பாகம் வெளியாகி ஹிட்டானதைத் தொடர்ந்து, 'விடுதலை 2ம் பாகம்' எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், 'விடுதலை 2' படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதியும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே, 'நானும் ரவுடி தான்' மற்றும் 'சிந்துபாத்' ஆகிய படங்களில் அப்பாவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத்தில் ஒரு சிறிய குடிசைக்கு வெளியே வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூர்யா மூவரும் அமர்ந்திருக்கின்றனர். இவர், 'விடுதலை 2' படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|