- வீடு›
- பொழுதுபோக்கு›
- புஷ்பா படத்தின் பிரீ –பிஸ்னஸ் பட்ஜெட்டை விட 2 மடங்கு என்று தகவல்
புஷ்பா படத்தின் பிரீ –பிஸ்னஸ் பட்ஜெட்டை விட 2 மடங்கு என்று தகவல்
By: Nagaraj Thu, 07 Sept 2023 6:07:55 PM
ஐதராபாத்: புஷ்பா 2 படத்தின் பிரீ - பிஸ்னஸ் மட்டும் ரூ.1000 கோடி என்ற தகவல் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேப்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து. சமீபத்தில்கூட புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் ரூபாய் 450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம், தற்போது இப்படத்தின் மொத்த உரிமையையும் வடமாநில நிறுவனம் ஒன்று ரூபாய் 1000 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.