Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அறம்-2 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக வந்த தகவல்கள் வதந்தி

அறம்-2 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக வந்த தகவல்கள் வதந்தி

By: Nagaraj Thu, 25 June 2020 8:59:25 PM

அறம்-2 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக வந்த தகவல்கள் வதந்தி

அறம்-2 திரைப்படத்தில் சுரேஷ்கீர்த்தி நடிக்கிறார் என்று வந்த செய்திகள் வதந்தி என தெரிய வந்துள்ளது.

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் அறம். 2017ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. நயன்தாரா தொடர்ந்து முதன்மைக் கதாபாத்திரத்தில் பல படங்களில் நடிப்பதற்கும் முக்கிய காரணமாக அறம் திரைப்படம் அமைந்தது.

அறம் திரைப்படத்திற்குப் பிறகு நயன்தாரா அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

keerthy suresh,arum-2,rumor,movies ,கீர்த்தி சுரேஷ், அறம்-2, வதந்தி, திரைப்படங்கள்

கோபி நயினார் எடுக்க இருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷிடம் விளக்கம் கேட்க அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இரண்டாம் பாகம் குறித்து யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தற்போது அண்ணாத்த, மிஸ் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். இந்த திரைப்படங்களின் வேலைகள் மீதம் இருக்கிறது. அது முடிந்த பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான வேலைகளை ஒப்புக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

ஒருவேளை அறம் படக்குழுவில் இருந்து தன்னிடம் இயக்குநர் தொடர்பு கொண்டு கதையைச் சொல்லி அது தனக்கு பிடித்து இருந்தால் அதன் பிறகுதான் முடிவெடுக்க இருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

Tags :
|
|