Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • குறைந்த நாள் நீங்கா இடம் ..தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை செளந்தர்யா பிறந்த தினம்..

குறைந்த நாள் நீங்கா இடம் ..தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை செளந்தர்யா பிறந்த தினம்..

By: Monisha Mon, 18 July 2022 7:38:52 PM

குறைந்த நாள் நீங்கா இடம்  ..தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை செளந்தர்யா பிறந்த தினம்..

கர்நாடக மாநிலத்தில் பிறந்த செளந்தர்யா, 1992-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கந்தர்வா' எனும் படத்தின் மூலம் முதன்முதலாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.தமிழ் நடிகர் கார்த்திக் நடித்த, பொன்னுமணி படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தார் செளந்தர்யா. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம், படையப்பா ஆகிய இரண்டு படங்களில், நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தார்.

birthday,sowndarya,actress,tamil ,தமிழ் ,ரசிகர், செளந்தர்யா,நடிகை ,

சினிமா மட்டுமின்றி அரசியலிலும் நுழைந்து, பாஜகவின் முக்கிய அரசியல் பிரமுகராகவும் இருந்தார் செளந்தர்யா.2004-ம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி பாஜவுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் செளந்தர்யா உயிரிழந்தார்.குறைந்த நாட்களே வாழ்ந்தாலும், ரசிகர்களின் மனதை விட்டு நீங்காதபடி பல சிறந்தப் படங்களை கொடுத்துச் சென்றுள்ளார் செளந்தர்யா.

Tags :