Advertisement

அது வெறும் வதந்தி... இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மறுப்பு

By: Nagaraj Tue, 18 July 2023 9:11:12 PM

அது வெறும் வதந்தி... இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மறுப்பு

அமெரிக்கா: டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்தை நான் படமாக்கப் போவதாக வெளியான செய்தி வதந்தி என்று இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மறுத்துள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான ‘டைட்டானிக்’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 111 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. வசூலிலும் சாதனை படைத்தது.

cinema,crash,style,titan,titanic, ,சினிமா, டைட்டன், டைட்டானிக், பாணி, விபத்து

சமீபத்தில் கடலில் 4000 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைப் பார்ப்பதற்காக கோடீஸ்வரர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் சென்றது. ஆனால் துரதிஷ்டவசமாக டைட்டன் கப்பல் வெடித்து சிதறியதில் 5 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் டைட்டான் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் கப்பலைப் போன்று படம் எடுக்கப் போவதாக இணையத்தில் தகவல் பரவியது. இதற்குப் பதிலளித்த ஜேம்ஸ் கேமரூன், ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘டைட்டன் விபத்தை நான் படமாக்கப் போவதாக வெளியான செய்தி வதந்தி’ என்று மறுத்துள்ளார். இருப்பினும், வேறு சில ஹாலிவுட் இயக்குனர்கள் டைட்டன் விபத்தை படமாக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags :
|
|
|
|