Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஆரோக்கியமானவர்களுக்கு மாரடைப்பு வராது என்பது உண்மையல்ல... நடிகை சுஷ்மிதா அட்வைஸ்

ஆரோக்கியமானவர்களுக்கு மாரடைப்பு வராது என்பது உண்மையல்ல... நடிகை சுஷ்மிதா அட்வைஸ்

By: Nagaraj Wed, 22 Mar 2023 7:59:50 PM

ஆரோக்கியமானவர்களுக்கு மாரடைப்பு வராது என்பது உண்மையல்ல... நடிகை சுஷ்மிதா அட்வைஸ்

மும்பை: பெண்கள் மற்றும் ஆரோக்கியமானவர்களுக்கு மாரடைப்பு வராது என்பது உண்மையல்ல என்று நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல்வன் படத்தில் இடம்பெற்ற சக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். சுஷ்மிதா சென் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு தற்போது குணமடைந்து வருகிறார்.

அப்போது சுஷ்மிதா சென் கூறுகையில், “பெண்கள் மற்றும் ஆரோக்கியமானவர்களுக்கு மாரடைப்பு வராது என்பது உண்மையல்ல என்பதை நிரூபித்து விட்டேன்.இதய நாளங்களில் 90 சதவீதம் அடைப்பு இருந்தது. ஆனாலும் நான் ஆரோக்கியமாக இருந்ததால்தான் காப்பாற்ற முடிந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே பெண்களே, தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

actress,advice,heart attack,movies,sushmita-sen, ,அறிவுரை, சினிமா, சுஷ்மிதா சென், நடிகை, மாரடைப்பு

அதற்காக உடலை வருத்திக்கொள்ள வேண்டாம். வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்தால் போதும். போதுமான அளவு தூக்கம் வேண்டும். ஆரோக்கியமான உணவு, தூக்கம், உடற்பயிற்சி மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதயத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை மாரடைப்புக்கு வழிவகுக்கும். எனவே பெண்களே தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்கள். ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாமல் நேரத்திற்கு சாப்பிடுங்கள். மன இறுக்கத்துக்கு இடம் அளிக்க வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

Tags :
|
|