Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஐஸ்வர்யாராய் போலவே உள்ள பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்; சினிமாவில் ஹீரோயின் ஆனார்

ஐஸ்வர்யாராய் போலவே உள்ள பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்; சினிமாவில் ஹீரோயின் ஆனார்

By: Nagaraj Fri, 12 June 2020 7:38:49 PM

ஐஸ்வர்யாராய் போலவே உள்ள பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்; சினிமாவில் ஹீரோயின் ஆனார்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தன் அழகு மற்றும் நடிப்பால் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். இவரை போலவே உள்ளவர்தான் அம்ருதா என்பவர்.

இருவர் படம் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். அதன் பின் அவர் பல படங்களில் நடித்து இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக மாறினார். தற்போது வரை சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கும் ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

aishwarya rai,dictak,amruta,heroine,cinema ,ஐஸ்வர்யாராய், டிக்டாக், அம்ருதா, ஹீரோயின், சினிமா

இந்நிலையில் அச்சு அசலாய் அவர் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாகி வந்தார். அவர் பெயர் அம்ருதா. இவர் சினிமா நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதால் சமூக வலைதளங்களில் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

அம்ருதாவை ரசிகர்கள் ஜுனியர் ஐஸ்வர்யா ராய் என்று அழைக்கும் அளவிற்கு இவர் பிரபலம் அடைந்துள்ளார். இவரது வீடியோக்களை பலரும் பார்த்து வந்த நிலையில் இப்போது சினிமா ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

மலையாளத்தில் சுனில் காரியத்துக்கரா இயக்கத்தில் 'பிக்காஸோ' என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதையடுத்து அம்ருதாவிற்கு சினிமா ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|