Advertisement

ரஜினி படத்தில் செம கேரக்டரில் நடிக்கும் ஜெய், தமன்னா

By: Nagaraj Thu, 06 Oct 2022 9:10:14 PM

ரஜினி படத்தில் செம கேரக்டரில் நடிக்கும் ஜெய், தமன்னா

சென்னை: ஜெயிலர் படத்தில் நடிகர் ஜெய் மற்றும் தமன்னா இருவரும் சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை ஈட்டவில்லை. எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினி தனது அடுத்த படத்தை உடனடியாக அறிவித்தார்.

அந்த வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். இப்படத்தில் அவருடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

aishwarya rai,film,jai,jailer,rajinikanth, ,அண்ணாத்த, ஐஸ்வர்யா ராய், ஜெய், ரஜினிகாந்த், வசூலை

மேலும், படத்தில் ரஜினிக்கு இணையாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. நடிகர் ஜெய் மற்றும் தமன்னா இருவரும் சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கின்றனர். சொல்லப்போனால் ரஜினிக்கு போட்டியாக இவர்களின் கேரக்டர் இருக்கும்.

படம் வெளியான பிறகு இவர்களின் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் என படக்குழுவினர் கூறி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த ஜெய் தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.

Tags :
|
|
|