Advertisement

ஜெயிலர் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.195 கோடிக்கும் மேல் வசூல்

By: Nagaraj Mon, 04 Sept 2023 12:34:09 PM

ஜெயிலர் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.195 கோடிக்கும் மேல் வசூல்

சென்னை: 25 நாட்களாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் தமிழக வசூல் அசரடித்துள்ளது. இதுவரை ரூ.195 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.

2.0 படத்திற்கு பின் பாக்ஸ் ஆபிசில் ரூ. 600 கோடியை கடந்து வசூல் செய்துள்ள தமிழ் படம் என்ற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக ரஜினிக்கும், நெல்சன் திலீப்குமாருக்கும்ட விலைஉயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்தார் தயரிப்பாளர் கலாநிதி மாறன்.

இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி விரைவில் அமையும் என கூறப்படுகிறது. ஜெயிலர் 2வாக கூட அந்த படம் இருக்கக்கூடும் என தகவல் உலா வருகிறது.

உலகளவில் ரூ. 600 கோடியை கடந்துள்ள ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தெரியுங்களா? முதல் நாள் தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த ஜெயிலர் படம், 25 நாட்களை கடந்துள்ள நிலையில், ரூ. 195 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

வருகிற 7ம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையிலும், ஜெயிலர் படத்திற்கு திரையரங்கில் வரவேற்பு கூடியுள்ளது.

Tags :