Advertisement

'ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை தாண்டி வசூல்

By: vaithegi Wed, 16 Aug 2023 12:55:17 PM

'ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை தாண்டி வசூல்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்து உள்ளனர்.

இதையடுத்து கடந்த 10ம் தேதி வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டு வருகிறது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் பெரிய சாதனைப் படைத்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

world,jailer,film ,உலகம் ,ஜெயிலர்,படம்


இந்தியா முழுவதும் இந்த படம் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்து உள்ளது. சுதந்திர தினமான நேற்று ‘ஜெயிலர்’ படம் நாடு முழுவதும் ரூ.33 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கேரளாவில் இந்த படம் இதுவரை ரூ.30 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Tags :
|
|