- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரிலீசுக்கு முன்பே வெளிநாடுகளில் வசூல் சாதனை படைத்துள்ள ஜெயிலர்
ரிலீசுக்கு முன்பே வெளிநாடுகளில் வசூல் சாதனை படைத்துள்ள ஜெயிலர்
By: Nagaraj Sat, 05 Aug 2023 11:32:49 PM
சென்னை: ரிலீஸுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்துள்ளது ஜெயிலர் படம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த 2ம் தேதி தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து பட்டையைக் கிளப்பியது. ஏற்கனவே மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த ஜெயிலர் படம் டிரைலர் வெளிவந்தபிறகு எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் ஜெயிலர் படம் ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதன்படி, USA 400K $, UK 100K $, Gulf, Srilanka 200K $ என ரெக்கார்டு பிரேக்கிங் செய்துள்ளது.