Advertisement

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் வசூலான ஜெயிலர்

By: vaithegi Thu, 17 Aug 2023 4:14:17 PM

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் வசூலான ஜெயிலர்

‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் ரூ.375 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு ...நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர்.

இதையடுத்து இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 10ம் தேதி வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனைப் படைத்து கொண்டு வருகிறது.

jailer,sadhanai,rajinikanth ,ஜெயிலர்,சாதனை,ரஜினிகாந்த்


இந்தியா முழுவதும் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. கடந்த சுதந்திர தினம் அன்று ‘ஜெயிலர்’ படம் நாடு முழுவதும் ரூ.33 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்பட்டது. கேரளாவில் இதுவரை ரூ.30 கோடியும், தமிழகத்தில் ரூ.100 கோடியும் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியனது.

இந்நிலையில், இந்த படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.375 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்து உள்ளது. மேலும் தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் வாரத்தில் வசூலான அதிக தொகை என்றும் அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

Tags :
|