Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஜெயிலர் படத்தின் பாடல்

யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஜெயிலர் படத்தின் பாடல்

By: Nagaraj Wed, 19 July 2023 7:03:54 PM

யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஜெயிலர் படத்தின் பாடல்

சென்னை: யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் ஜெயிலர் பாடல் உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

jailer,song,top,trending,youtube ,ஜெயிலர், ட்ரெண்டிங், பாடல், முதலிடம், யூடியூப்

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். ஆக்‌ஷன் கலந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியான ஒரு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|