Advertisement

உடல் எடை மெலிந்ததற்கு காரணம் மஞ்சள்காமாலை நோய்: ரோபோ ஷங்கர் வேதனை

By: Nagaraj Mon, 12 June 2023 10:36:33 AM

உடல் எடை மெலிந்ததற்கு காரணம் மஞ்சள்காமாலை நோய்: ரோபோ ஷங்கர் வேதனை

சென்னை: தனது உடல் எடை குறைந்ததற்கு காரணம் மஞ்சள் காமாலை நோய் என்று ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்த்து வெள்ளித்திரைக்கு வந்து ஜெயித்த சில நடிகர்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர். தனுஷ், அஜித், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்களில் அவர் காமெடியனாக கலக்கி இருக்கிறார்.

robot shankar,body weight,jaundice,affect ,ரோபோ ஷங்கர், உடல் எடை, மஞ்சள்காமாலை, பாதிப்பு

ரோபோ ஷங்கர் சமீப காலத்தில் திடீரென உடல் மெலிந்துபோனது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏறபடுத்தியது. அவரது போட்டோக்களை பார்த்து 'என்ன தான் ஆச்சு அவருக்கு' என ரசிகர்கள் சோகத்துடன் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ரோபோ ஷங்கர் தனக்கு என்ன தான் ஆச்சு என கூறி இருக்கிறார். "ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்கலாம் என டயட் இருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. இரண்டும் சேர்ந்து என் உடலை உருக்கிவிட்டது."

"ஆனால் நான் இறந்துவிட்டேன் என்று கூட சிலர் பொய்யாக எழுதுகிறார்கள்" என ரோபோ ஷங்கர் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

Tags :