- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஜவான் .. உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல்
ஜவான் .. உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல்
By: vaithegi Sun, 24 Sept 2023 3:03:33 PM
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி 3 வாரங்கள் ஆன நிலையிலும், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை என்று கூறலாம்.
இதையடுத்து பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த திரைப்படம் அந்த அளவிற்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடைசியாக ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் அவருக்கு 1000 கோடி வசூல் கொடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து ஜவான் திரைப்படமும் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து உள்ளதால் பாலிவுட் திரையுலகமே ஷாருக்கான் கொண்டாடி வருகிறது.
அதைப் போன்று ஜவான் படத்தின் இயக்குனர் அட்லீ கடைசியாக விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜவான் படத்தை அவர் இயக்கி இருந்த நிலையில் இத்திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து அவருக்கும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகி உள்ளது.
மேலும் இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ பெரிய இயக்குனர்கள் இருந்தும் அவர்கள் பாலிவுட்டிற்கு சென்று ஒரு படம் எடுத்து அந்த படம் 1000 கோடி வசூல் செய்ததே இல்லை. ஜவான் திரைப்படம் தான் முதல் முறை. எனவே தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் செய்த படம் எடுத்த இயக்குனர் என்ற சாதனையை இயக்குனர் அட்லீ தற்போது படைத்து உள்ளார்.