Advertisement

‘ஜவான்’ வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல்

By: vaithegi Fri, 08 Sept 2023 11:59:40 AM

‘ஜவான்’ வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து உள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்து உள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் நேற்று வெளியானது.

இதனை அடுத்து இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், உலகம் முழுவதும் ஒரே நாளில் மட்டும் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

collection,jawan,world ,வசூல் ,ஜவான்,உலகம்

அதைத்தொடர்ந்து இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக் நடித்து வெளியான ‘பதான்’ படம் முதல் நாளில் ரூ.57 கோடி வசூலித்திருந்த நிலையில் அந்த படத்தின் முதல்நாள் வசூலை ‘ஜவான்’ முறியடித்து உள்ளது.

மேலும் இதுவரை வெளியான அனைத்து பாலிவுட் படங்களின் முதல்நாள் வசூலையும் ‘ஜவான்’ முறியடித்து உள்ளதாக சினிமா வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.




Tags :
|