Advertisement

பொங்கலுக்கு ஜெயம் ரவியின் பூமி படம் ஓடிடியில் ரிலீஸ்

By: Nagaraj Thu, 24 Dec 2020 10:27:34 PM

பொங்கலுக்கு ஜெயம் ரவியின் பூமி படம் ஓடிடியில் ரிலீஸ்

பொங்கலுக்கு ஜெயம் ரவியின் பூமி படம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவியின் 25-வது படம், 'பூமி'. லட்சுமண் இயக்கிய இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ள இந்த படம், கடந்த மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

release for pongal,odt,bhoomi movie,chakra ,பொங்கலுக்கு ரிலீஸ், ஓடிடி, பூமி திரைப்படம், சக்ரா

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை. இந்நிலையில், இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதேபோல் மாதவனின் மாறா, விஷாலின் சக்ரா போன்ற படங்களும் பொங்கலுக்கு ஓடிடி-யில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|