Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய்யின் தாய் வேடத்தில் நடிக்க ஜெயசுதாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம்

விஜய்யின் தாய் வேடத்தில் நடிக்க ஜெயசுதாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம்

By: Nagaraj Sat, 18 Feb 2023 9:04:12 PM

விஜய்யின் தாய் வேடத்தில் நடிக்க ஜெயசுதாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம்

சென்னை: வாரிசு படத்தில் நடிக்க ஜெயசுதாவுக்கு ரூ.30 லட்சம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வாரிசு படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் அருமையாக அமைய ஜெயசுதா முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது.

salary,jayasudha,rs.30 lakh,vijay,varisu film ,சம்பளம், ஜெயசுதா, ரூ.30 லட்சம், விஜய், வாரிசு படம்

வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாம், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் நடிகை ஜெயசுதா. அவருக்கும் விஜய்க்குமான தாய், மகன் செண்டிமெண்ட் காட்சிகள் கண்கலங்க வைத்தது.

இந்நிலையில், வாரிசு படத்தில் விஜய்க்கு தாயாக நடிக்க நடிகை ஜெயசுதா ரூ. 30 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

Tags :
|
|