Advertisement

ஜூலிக்கு இவ்வளவு தீவிரமான ரசிகரா?...புகைப்படத்தால் பெரும் பரபரப்பு

By: Monisha Thu, 02 July 2020 12:27:02 PM

ஜூலிக்கு இவ்வளவு தீவிரமான ரசிகரா?...புகைப்படத்தால் பெரும் பரபரப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பகுதியில் ஜல்லிக்கட்டு போராட்ட வீராங்கனை ஜூலி பங்கேற்றிருந்தார். ஆரம்பத்தில் சில வாரங்கள் ஜூலிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அவர் அடுத்தடுத்து சொன்ன பொய்கள், காயத்ரி ரகுராமுடன் சேர்ந்து அடித்த லூட்டிகள் ஓவியாவுக்கு எதிராக செய்த வன்மங்கள் ஆகியவையும் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.

எனவே அந்த நிகழ்ச்சியில் மிகவும் வெறுக்கப்பட்ட போட்டியாளராக அவர் மாறினார். இதனையடுத்து அவர் ஒரு சில வாரங்களிலேயே போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் ஒரு சில தொலைக்காட்சி ஷோக்களில் நடித்து வரும் ஜூலிக்கு தற்போது ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக தெரிகிறது.

biggboss show,julie,fans,cinima ,பிக்பாஸ் நிகழ்ச்சி,ஜூலி,ரசிகர்கள்

இந்த நிலையில் ஜூலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் ஜூலியன் புகைப்படத்தை தனது பூஜை அறையில் வைத்து அந்த புகைப்படத்தை வழிபட்டு வருவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலிக்கு இவ்வளவு தீவிரமான ரசிகரா என்ற ஆச்சரியமும் எழுந்துள்ளது.

Tags :
|
|