Advertisement

வெப் தொடரில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா

By: vaithegi Tue, 07 Mar 2023 10:27:02 AM

வெப் தொடரில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா

ஜோதிகா சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து கொண்டு வருகிறார். பிறமொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'காதல்: தி கோர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்குவர உள்ளது.

அடுத்து இந்தியில் 'ஶ்ரீ' என்ற பெயரில் தயாராகும் படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார். மும்பையில் தங்கி இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அடுத்து இந்தியில் 'தாபா கார்டல்' என்ற பெயரில் உருவாகும் வெப் தொடரில் நடிக்கவும் ஜோதிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

jyotika,web series ,ஜோதிகா ,வெப் தொடர்


‘தாபா கார்டல்’ (Dabba Cartel) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் ஜோதிகாவுடன் பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி, இந்தி நடிகர் சுஜ்ராஜ் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

நெட்பிளிக்ஸ் தளத்துக்காக உருவாகும் இந்தத் தொடரை ‘மார்க்கரிடா வித் ஸ்ட்ரா’ , ‘த ஸ்கை இஸ் பிங்க்’ படங்களை இயக்கிய சோனாலி போஸ் இயக்குகிறார். ஐந்து குடும்பப் பெண்களைப் பற்றிய இந்தக் கதையில் ஜோதிகா, ஷபானா ஆஸ்மி தவிர மேலும் சில நடிகைகளும் நடிக்க இருக்கின்றனர். அவர்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனை அடுத்து படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Tags :