Advertisement

க/பெ ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பு!

By: Monisha Fri, 05 June 2020 5:28:03 PM

க/பெ ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு இருந்தாலும் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக வாய்ப்பில்லை என்றும் 150 திரையரங்குகளுக்கும் குறைவாக ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறப்படுகிறது.

ka pea ranasingham,vijay sethupathi,aishwarya rajesh,ott ,க/பெ ரணசிங்கம்,விஜய்சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ்,ஓடிடி

இந்த நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பைப் பார்த்த அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு முன்னணி ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனால் விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

இன்னும் மூன்று மாதங்கள் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்றால் ‘மாஸ்டர், ‘சூரரை போற்று’ போன்ற திரைப்படங்களும் ஓடிடியை நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Tags :